×

பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை

 

திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023 – 24 கல்வியாண்டில் 177 மாணவர்கள் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் ரோஷ்னி 600க்கு 589 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதலிடத்தையும், ராகவி 600க்கு 586 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தையும், லிங்கேஷ்வரன் 600க்கு 583 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில் மாணவி ரோஷ்னி, தமிழ் – 97, ஆங்கிலம் – 93, பொருளியல் – 100, வணிகவியல் – 99, கணக்குப் பதிவியல் – 100, வணிகக்கணிதம் – 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி ராகவி தமிழ் – 96, ஆங்கிலம் – 94, பொருளியல் – 99, வணிகவியல் – 100, கணக்குப் பதிவியல் – 100, வணிகக்கணிதம் – 97 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் லிங்கேஷ்வரன் தமிழ் – 96, ஆங்கிலம் – 89, கணிதம் – 100, இயற்பியல் – 99, வேதியியல் – 99, கணித அறிவியல் – 100 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் 29 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும், 21 மாணவர்கள் 99 மதிப்பெண்களும், 29 மாணவர்கள் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 575 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும், 525 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஜோ.மேரி, தே.குமரீஸ்வரி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Bharatithasan Matriculation School ,THIRUVALLUR ,THIRUVALLUR BHARATIDASAN METRIC SECONDARY SCHOOL ,Dinakaran ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...